உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார், சாயல்குடி கடலாடி பகுதியில் மழை

முதுகுளத்துார், சாயல்குடி கடலாடி பகுதியில் மழை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், சாயல்குடி, கடலாடி சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்தது. முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 1:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதுகுளத்துார் அருகே காக்கூர், செல்வநாயகபுரம், கடம்பன்குளம், ஏனாதி, கூவர்கூட்டம் வெண்ணீர்வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை பெய்தது. ஒரு சில கிராமங்களில் உழவு செய்யப்பட்டிருப்பதால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதிகமாக மாறியது. இதனால் மக்கள் நடப்பதற்கு சிரமப்பட்டனர். *சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் மழை பெய்தது. கடலாடி மற்றும் மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கோடை உழவு செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நேற்று பெய்த மழை பயனுள்ளதாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை