உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோடுகளில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

ரோடுகளில் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் போதிய வடிகால் வசதியின்றி மழைநீர் ரோடு, வீதிகளில் குளம் போல தேங்குவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்கிறது. நேற்று மதியம் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் நகராட்சி பகுதிகள், சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சியில் மழை நீர் வடிகால்கள் பராமரிக்கப்படாமல் உள்ளதால் குளம்போல ரோடுகள், தாழ்வானபகுதிகளில் தேங்கியது. குறிப்பாக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தேங்கிய நீரால் நோயாளிகள், பார்வையாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஒம்சக்தி நகர், பாரதிநகர், மதுரை- ராமேஸ்வரம் ரோட்டில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர். மழைநீரை ஊருணிகளுக்கு கொண்டுசெல்லும் வகையில் வரத்து கால்வாய்களை சீரமைக்க நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை