உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வானவில் மன்ற போட்டிகள்

 வானவில் மன்ற போட்டிகள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள் நடந்தது. தலைமை ஆசிரியர் சந்தனவேல் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். உலகளாவிய சவாலில் உள்ளூர் தீர்வுகள் என்ற தலைப்பில் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை, ஆய்வு சார்ந்த படைப்புகள் செய்து கொண்டு வந்தனர். படைப்புகள் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கினர். இதில் முதுகுளத்துார் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப் பள்ளியில் இருந்து 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர். ஏற்பாடுகளை வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியா, வைஷ்ணவி செய்தனர். உடன் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை