உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் அவதி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்டநேரம் காத்திருக்கின்றனர். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு சித்தா டாக்டர் உட்பட 11 டாக்டர்கள், மூன்று லேப் டெக்னீசியன்கள் பணியாற்ற வேண்டும். தற்போது மருத்துவ அதிகாரி உட்பட மூன்று டாக்டர்கள், ஒரு லேப் டெக்னீசியன் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. சில நேரங்களில் சிகிச்சை பெற முடியாமல் தனியாரை நாடிச் செல்கின்றனர். லேப் டெக்னீசியன் விடுப்பு எடுத்தால், பரிசோதனைகள் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர தேவையான மருந்துகள், வசதிகள் இருந்தும் போதிய சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். புற நோயாளிகள் பிரிவிற்கு வர முன் பயன்பட்ட கேட் பூட்டப்பட்டு, புது வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது பலருக்கு தெரியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கழிப்பறையும் பூட்டபட்டுள்ளதால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது: பணியிடங்களை நிரப்ப கோரப்பட்டுள்ளது. கழிப்பறை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ