உள்ளூர் செய்திகள்

விளையாட்டு போட்டி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜாய் எபினேசர் ஹெப்சி முன்னிலை வகித்தார். லூயிஸ் லெவல் மெட்ரிக் பள்ளி முதல்வர் சூசையம்மாள் ஜெயா வரவேற்றார். இதில் தடகள போட்டியில் ஆந்திரேயா மகளிர் பள்ளி மாணவி ரோஸ்னி பாத்திமா 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றார். நயினார்கோவில் வட்டார போட்டியில், பரமக்குடி அலங்கார மாதா உயர்நிலை பள்ளி மாணவர்கள் தினேஷ்குமார், மோனிசா, மேத மனோராஜூ ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். இவர்களை பள்ளி தாளாளர் பிரபாகரன், தலைமை ஆசிரியை ஜோஸ்பின் மேரி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை