உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மொபைல் போன் மூலம் இறந்தோர் விபரம் தெரிந்தது

மொபைல் போன் மூலம் இறந்தோர் விபரம் தெரிந்தது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று நடந்த கலவரத்தில் இறந்த இருவரது விபரம் மொபைல்போன் மூலம் தெரியவந்தது. பரமக்குடி கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலியான மூவர் யார் என தெரியாத நிலையில், இருவரின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இருவரது பையிலிருந்த மொபைல் போன் ஒலித்துக் கொண்டே இருந்தன. இதை கேட்ட ராமநாதபுரம் டி.எஸ்.பி.,முரளிதரன், போன்களில் பேசியவர்களிடம் கேட்டபோது, ஒருவர் பரமக்குடி ஓட்டப்பாலத்தை சேர்ந்த ஜெயபால், 20. இவர் ஒரு மாதத்திற்கு முன் கலப்பு திருமணம் செய்தவர். மற்றொருவர் பரமக்குடி காந்திநகரை சேர்ந்த பன்னீர்செல்வம், 50 ,என தெரியவந்தது. மூன்றாவது நபர் யார் என நேற்றிரவு வரை தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை