உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் - சென்னை அரசு பஸ் சேவை நிறுத்தம்: பயணிகள் பாதிப்பு

ராமநாதபுரம் - சென்னை அரசு பஸ் சேவை நிறுத்தம்: பயணிகள் பாதிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசுப்போக்குவரத்துக்கழக பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு புறப்படும் அதே நேரத்தில் சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு பஸ் சேவை வழங்கப்பட்டு வந்தது. ரயில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் கிடைக்காத நிலையில் தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் அரசு போக்குவரத்துக்கழக சேவையினை பயணிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த சேவையில் சரியான வசூல் இல்லை என்ற காரணம் காட்டி அரசு பஸ் சேவையை நிறுத்தியுள்ளனர். சென்னைக்கு நேரடியாக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மீண்டும் பஸ் இயக்க வேண்டும், என பயணிகள் வலியுறுத்தினர். இது குறித்து ராமநாதபுரம் அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்ததாவது: அரசு கொள்கை முடிவு எடுத்து சென்னைக்கான சேவை நிறுத்தப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது எந்த பஸ்சும் சென்னைக்கு இயக்கப்படுவதில்லை. தொடர் விடுமுறை, விழாக்காலங்களில் மட்டுமே சிறப்பு பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !