உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம்  பெரிய கண்மாய் நிரம்புகிறது

ராமநாதபுரம்  பெரிய கண்மாய் நிரம்புகிறது

ராமநாதபுரம் : -தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்வதால் கன மழையால் வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்கிறது. அடுத்தடுத்து ஏற்படும் புயல் சின்னங்களால் வைகை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர் நிலைகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கியுள்ளது.பெரும்பான்மையான கண்மாய், ஊருணிகள் நிரம்பி வருகின்றன. ராமநாதபுரம் பெரிய கண்மாய் அதன் முழு கொள்ளளவான 7 அடியில் தற்போது 5.75 அடி நிரம்பி உள்ளது. 6 அடி வரை நீரை தேக்க முடியும். தொடர்ந்து வைகை ஆற்றுப்படுகை பகுதிகளில் கனமழை நீடித்தால் ராமநாதபுரம் கண்மாய் நிறைந்து மறுகால் பாயும் நிலை உள்ளது. வைகை நீர்பிடிப்பு பகுதிகளான தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் வைகை ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது ராமநாதபுரம் பெரிய கண்மாயில் ஐந்தரை அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. 6 அடி வரை தண்ணீரை சேமிக்க முடிவு செய்து வரும் தண்ணீரை முழுமையாக பெரிய கண்மாய்க்கு அனுப்புகின்றனர்.மேலும் 6 அடியை எட்டியதும் சக்கரக்கோட்டைக்கு திறந்துவிட்டு அதன்பின அடுத்த கட்ட முடிவு எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நீரின் வேகம் அதிகரித்துள்ளதால் ராமநாதபுரம் பெரிய கண்மாய் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி