உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

ராமநாதபுரம்:வழக்கு விசாரணையில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு ராமநாதபுரம் சப் கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.தேவிபட்டினம் பனைக்குளம் புதுகுடியிருப்பை சேர்ந்த முத்துக்குமார். இவருக்கும் இதே ஊரை சேர்ந்த வேல்சாமி என்பவருக்கும் மாரியம்மன் கோயிலில் சுவாமி கும்பிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. வேல்சாமி மற்றும் 15 பேர் சேர்ந்து 20.8.2008ல் பனைகுளம் புதுகுடியிருப்பு பகுதியில் பெட்டி கடை முன் நின்ற முத்துகுமாரை ஆயுதங்களால் தாக்கினர். இதுகுறித்து தேவிபட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் சப்கோர்ட்டில் நடந்து வருகிறது. மூன்று முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் மாரியப்பனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி சந்திரா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ