உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் மறியல்: 60 பேர் மீது வழக்கு

ராமேஸ்வரத்தில் மறியல்: 60 பேர் மீது வழக்கு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முன் உட்பட நான்கு ரத வீதிகளில் அனைத்து வாகனங்களும் நிறுத்த செப்.1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்த சிலர் ராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் மேற்குகோபுரம் பகுதியில் ஆட்டோக்களை நிறுத்தி தடை ஏற்படுத்தினர். இதனால் விநாயகர் ஊர்வலம் தடைப்பட்டது. போலீசார் தலையிட்டதை தொடர்ந்த மறியல் கைவிடப்பட்டது. அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட கட்சியினர் கருணாகரன், செந்தில், செந்தில்வேல்(மார்க்சிஸ்ட்), நாசர், சங்கர்(தி.மு.க.,), பழனிச்சாமி(ம.தி.மு.க), நாம் தமிழர் இயக்கம் இளங்கோ மற்றும் ஆட்டோ டிரைவர்கள் 60 பேர் மீது ராமேஸ்வரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை