உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி

பரமக்குடி இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி

பரமக்குடி : பரமக்குடி இந்தியன் வங்கி கிளையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மொட்டை மாடி வழியாக வந்த மர்ம கும்பல், மாடியில் உள்ள இரும்புகேட் மற்றும் வங்கியின் பிரதான கேட்டை 'ஆக்சா பிளேடால்' அறுத்து உள்ளே புகுந்தது. கண்காணிப்பு கேமராவை பிளாஸ்டிக் பையால் மறைத்துவிட்டு, லாக்கரை கம்பி மற்றும் உளியால் திறக்க முயன்றும் முடியவில்லை. பின், லாக்கர் பதிக்கப்பட்டிருந்த அறை சுவற்றை, 'டிரிலிங்' இயந்திரத்தால் இடிக்க முயற்சித்துள்ளனர். நீண்ட நேரமாக முயற்சித்தும் சிறியளவில் மட்டுமே சுவர் உடைந்துள்ளது. அறையை உடைப்பதற்குள், விடிய துவங்கியதால் மர்மகும்பல் கொண்டு வந்த உளி, ஆக்சா பிளேடு, பேக், உள்ளூர் கடை பெயர் கொண்ட துணிப்பை மற்றும் கையுறை ஆகியவற்றை விட்டுவிட்டு வந்த வழியாக தப்பி சென்றது.நேற்று காலை 9 மணிக்கு வங்கியை திறக்க வந்த உதவி மேலாளர் ஜெகன் தேவராஜ், கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு, மேலாளர் ரத்தினவேலு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பரமக்குடி டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கொள்ளை முயற்சி நடந்த இடத்தை பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் லாக்கரில் பதிவான கைரேகைகளை பதிவு செய்து எடுத்து சென்றனர். போலீஸ் மோப்ப நாய் 'லைக்கா' வரவழைக்கப்பட்டது. அது சிறிது நேரம் அந்த இடத்தை சுற்றி வந்து நின்றது. நேற்று பகல் 12மணிக்கு மேல் வங்கி, வழக்கம்போல் இயங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ