உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீடுகள் பெயரில் கடைகளுக்கு மின் இணைப்பு அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு

வீடுகள் பெயரில் கடைகளுக்கு மின் இணைப்பு அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் வீடுகளுக்கு மின் இணைப்பு என்ற பெயரில் கடைகளுக்கு முறைகேடாக இணைப்பு பெற்றுள்ளதால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.வீடுகளுக்கு பயன்படுத்தபடும் மின்சாரத்திற்கு 1-50 யூனிட்டுக்கு 65 காசு, 100 யூனிட் வரை 75 காசு, 101-200 வரை ரூ.1.50, 200-600 வரை ரூ.2.20, 600 யூனிட்டுகளுக்கு மேல் ரூ.3.50 கட்டணம். வணிக நிறுவனங்களுக்கு 1-200 யூனிட் வரை ரூ.5.30, 200 யூனிட்டுகளுக்கு மேல் ரூ.5.80 கட்டணம்.முதுகுளத்தூரில் 50க்கும் மேற்பட்டோர் வீடுகளுக்கு மின் இணைப்பு பெயரில் கடைகள், நிறுவனங்களுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளனர். பல ஆண்டுகளாக இது தொடர்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. போலியான தகவல்களை அளித்தவர்கள் மீது மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதுகுளத்தூர் மின்வாரிய உதவி பொறியாளர் பொற்செல்வன் கூறியதாவது: இதுதொடர்பாக முறைகேடான தகவல்களால் மின் இணைப்பு பெற்றுள்ள வணிக நிறுவன கட்டடங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தவறுகள் கண்டுபிடிக்கபட்டால் அபராதம் விதிக்கப்படும். மேலும் வீடு, கடைகள் குறித்த இணைப்புகள் கணக்கெடுக்கவும் நடவடிக்கை எடுக்கபடும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ