உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விஷ ஜந்துக்கள் புகலிடமான கமுதி அரசு மருத்துவமனை

விஷ ஜந்துக்கள் புகலிடமான கமுதி அரசு மருத்துவமனை

கமுதி : கமுதி அரசு மருத்துவமனை, முட்புதருக்குள் உள்ளதால் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தின் நடுவில் நோயாளிகள் பரிதவிக்கின்றனர்.கமுதி அரசு மருத்துவமனையில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகள் உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் பராமரிப்பு இல்லை. முட்புதர்கள் அடர்ந்து விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறிவருகிறது. உள் நோயாளிகள் பீதியில் உள்ளனர். இதனால் இங்கு தங்கும் நோயாளிகள் ஒருவித பீதியுடனே உள்ளனர். முட்புதர்களை அகற்றி தோட்டம் அமைத்தால் நோயாளிகள் பீதி அகல்வதுடன், வசந்தம் நிலவி நோயாளிகள் விரைவில் குணமடையவும் வாய்ப்பு ஏற்படும். இதற்கு மருத்துவத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ