உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராம மக்களின் தேவை அறிந்து செயல்படுவேன்: ஆர்.வடமலை

கிராம மக்களின் தேவை அறிந்து செயல்படுவேன்: ஆர்.வடமலை

சாயல்குடி : ''கிராம மக்களின் தேவை அறிந்து செயல்படுவேன்'' என எஸ்.வாகைக்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.வடமலை கூறினார்.கடலாடி ஒன்றியம் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் கணேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்த பின் அவர் கூறியதாவது:எஸ்.வாகைக்குளம் ஊராட்சியில் இலந்தைக்குளம் ரோடு பல ஆண்டுகளாக இருசக்கர வாகனம் கூட செல்லமுடியாக அளவிற்கு குண்டும், குழியுமாக உள்ளது. தரமான தார் ரோடாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்க முயற்சி செய்வேன். முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வழி செய்வேன். மக்கள் தேவையறிந்து எந்த நேரத்திலும், எங்கும் சென்று உதவி செய்ய காத்திருக்கிறேன். பாகுபாடின்றி உதவி செய்வேன், என்றார். முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
செப் 15, 2025 12:01

யானைகளுக்கும் சுற்றலா வென்றால்மிக்க பிடிக்கும் அதுவும் நீர்நிலைகள் என்றால்கொண்டாட்டம். அதுவும் நம்மையுடன் வசிக்க ஆவலாக இருக்கும்.அதற்க்கு தேவையான உணவு நாம் ஏர் படுத்திக் கொடுத்தால் அது உண்டு விட்டு அதன் இருப்பிடத்திற்கு சென்று விடும். பெரும்பாலுமான மிருகங்கள் மனிதனுடன் விரோதம் பாராட்டுவதில்லை. உணவு தேடி வரும் போது குறுக்கிடக்கூடாது. அடர் கானகம் வழியில் செல்லும் போது லாரி ஓட்டுனர்கள் அதற்கு என ஏதாவது வாழை பழங்கள் வேறு ஏதாவது உண்பதற்கு எடுத்து செல்வார்கள். யானையும் அதை வாங்கி கொண்டு வழியை விட்டு விட்டு செல்லும். அதற்க்கு கோபம் வருமாறு தீங்க்கு செய்தால்தான் அதற்கு தாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். கரடிகளும் சிறுத்தைகளும் அபாயகரமானவை.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ