ராமேஸ்வரம் கடலில் மிதந்தபடி ஜல ஆசனம்
ராமேஸ்வரம்:சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் கடலில் யோகா பயிற்சியாளர் சுடலை 60, தேசியக் கொடியை கையில் ஏந்திக் கொண்டு மிதந்தபடி ஜலஆசனம்செய்தார்.ராமேஸ்வரம் சேவா பாரதி நகர் தலைவரான சுடலை இங்கு தங்கச்சிமடம் வில்லுாண்டி தீர்த்த கடலில் தேசிய கொடியை கையில் ஏந்தி 30 நிமிடம் மிதந்தபடி ஜலஆசனம்செய்தார்.இதனைத்தொடர்ந்து சிறிது நேரம் மிதந்தபடி பத்மாசனம், சிரசாசனம் செய்தார்.சமூக ஆர்வலரான இவர் குடியரசு தினம், சுதந்திர தின விழாவில் நாட்டின் பெருமையை பறைசாற்றும்விதமாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் மிதந்தபடிஜலஆசனம்செய்து வருகிறார்.