உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கல்லுாரி சுவரில் வளரும் ஆலமரச்செடியால் விரிசல்

ராமேஸ்வரம் கல்லுாரி சுவரில் வளரும் ஆலமரச்செடியால் விரிசல்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அரசு கல்லுாரி சுவற்றில் வளரும் ஆலமரச் செடியால் கட்டடத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அரசு கலைக் கல்லுாரி 4 ஆண்டுகளாக செயல்படுகிறது. இக்கல்லுாரிக்கு ராமேஸ்வரம் புதுரோடு அருகே ரூ. 5 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணி முடிய இன்னும் ஓராண்டு ஆகும்.இந்நிலையில் தற்போது கல்லுாரி வகுப்புகள் ராமேஸ்வரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடக்கிறது.ஆனால் இக்கட்டடத்தை சுற்றி காகங்கள் எச்சங்களாய் விழுந்த ஆலமர விதைகள் தற்போது 5 அடி உயரத்திற்கு வளர்ந்து மரமாக உள்ளது. அகற்றிட கல்வி ஆர்வலர்கள் பலமுறை வலியுறுத்தியும் கல்லுாரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. சில மாதங்களுக்குப் பின் ஆலமரம் பெரிதாகி கல்லுாரி கட்டடத்தில் விரிசல் ஏற்படுத்தி சேதமடைய வாய்ப்புள்ளது.எனவே வளரும் ஆலமரக் கன்றுகளை அகற்றிட கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ