3ம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடையால் ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்பு
ராமேஸ்வரம்:பலத்த சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் 3ம் நாளாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்து வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் சில நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் சூறாவளி வீசுவதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வது சிரமம் என்பதால் ஜன., 1 முதல் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். 3ம் நாளான நேற்றும் ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்ததால் மீன்பிடிக்க செல்ல தடை நீட்டிக்கப்பட்டதால் மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர்.அன்றாட குடும்பச் செலவிற்கு வழியின்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து 3 நாட்கள் மீன்பிடிக்க செல்லாததால் ரூ. 3 கோடி வரை மீன் வர்த்தகம் பாதித்தது.