/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு: கூடுதல் பொது மேலாளர் ஆய்வு
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு: கூடுதல் பொது மேலாளர் ஆய்வு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு பணியை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின்குமார் ஆய்வு செய்தார். ராமேஸ்வரத்தில் ரூ.90 கோடியில் ரயில்வே ஸ்டேஷன் மறுசீரமைப்பு பணி நடக்கிறது. இப்பணியை நேற்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின்குமார் ஆய்வு செய்தார். பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியவர் 2026 ஏப்., க்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு சென்றார். அங்கு பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலத்தின் இயந்திர செயல்பாடுகள், அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின் மாலை சிறப்பு ரயிலில் மதுரை புறப்பட்டு சென்றார்.