உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கிடப்பில் ராமேஸ்வரம் கோயில் யானை மணிமண்டபம் கட்டடம்

 கிடப்பில் ராமேஸ்வரம் கோயில் யானை மணிமண்டபம் கட்டடம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் யானை பவானி நினைவாக கட்டிய மணிமண்டபம் பணிகள் முடிவடையாமல் முடங்கியுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை பவானி 2012ல் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்கு சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தது. ராமேஸ்வரம் கோயிலில் பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கிய பவானிக்கு மணி மண்டபம் அமைக்க பக்தர்கள் வலியுறுத்தினர். அதன்படி ரூ.25 லட்சத்தில் ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கிங் வளாகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிமண்டபம் கட்டும் பணி துவங்கியது. பணி மந்தமாக நடந்தது. இந்நிலையில் மணி மண்டபம் பணி முழுமையாக முடிவடையாமல் உள்ளது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். பல ஆயிரம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய பவானி யானையை நினைவுபடுத்தும் வகையில் அமைத்த மணி மண்டபத்தை பணிகளை முடித்து பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து வைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை