உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரண பத்ரகாளியம்மன் கோயில் பூக்குழி விழா

ரண பத்ரகாளியம்மன் கோயில் பூக்குழி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை ரண பத்ரகாளியம்மன் கோயில் 43ம் ஆண்டு வைகாசி விசாக விழா ஜூன் 3 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று மூலவர்அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர்மாலையில் விரதம் இருந்த பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை