உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரிய பறவை வேட்டை: தந்தை, மகன் கைது

அரிய பறவை வேட்டை: தந்தை, மகன் கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அரியவகை பட்டியலில் உள்ள பறவைகளை வேட்டையாடிய ராஜேந்திரன் 50, மகன் பழனிச்செல்வத்தை 26, வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.மாவட்ட வன அலுவலர் ேஹமலதா தகவலின் பேரில் சாயல்குடி வனச்சரகர் ராஜசேகரன் தலைமையில் வனத்துறையினர் கமுதி அருகே பேரையூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு டூவீலர்களில் பறவைகளுடன் 2 பேர் சிக்கினர். விசாரணையில் பரமக்குடி லீலாவதி நகர் ராஜேந்திரன், மகன் பழனிச்செல்வம் என தெரிந்தது. இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து அரியவகை பறவைகளான உள்ளான்-4, வெண் கொக்கு -1, தாரா வாத்துக்கள் - 17 ஆகியவற்றை உயிருடன் பறிமுதல் செய்து சாயல்குடி இருவேலி கண்மாயில் பறக்க விட்டனர். இருவரின் 2 டூவீலர்களை பறிமுதல் செய்து தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதுபோல் ராமநாதபுரத்தில் வனச்சரகர் நித்தியகல்யாணி தலைமையில் தங்கப்பாநகரில் வனத்துறையினர் சோதனை செய்த போது இளையராஜா 32, என்பவர் கானாங்கோழி, கொக்கு ஆகிய பறவைகளை வேட்டையாடியது தெரிய வந்தது. இறந்த நிலையில் இருந்த பறவைகளை பறிமுதல் செய்து ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை