மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
திருப்புல்லாணி: ஹிந்து சமயத்தில் ரதசப்தமி என்பது தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுகிறது.சூரிய தேவன் ஏழு குதிரைகள் பூட்டிய தனது ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. இந்த நாள் சூரிய கடவுளின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ரத சப்தமியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாள் நேற்று காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து திருக்குறுங்குடி ஜீயர் மடத்தில் எழுந்தருளினார்.அங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனம், சாற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. ராமானுஜ ஜீயர் பூஜையில் பங்கேற்றார்.நேற்று இரவு 7:00 மணிக்கு திருக்குறுங்குடி ஜீயர் மடத்திலிருந்து சூரிய பிரபை வாகனத்தில் உற்ஸவமூர்த்திகள் திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தனர். கோயில் பட்டாச்சாரியார்கள் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாடியவாறு சென்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago