உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருமாள் கோயில்களில் நடந்த ரத சப்தமி விழா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பெருமாள் கோயில்களில் நடந்த ரத சப்தமி விழா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் ரத சப்தமி விழா பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது.எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி விழா கொண்டாடப்படும் நிலையில், சூரிய ஜெயந்தி தினம் ரத சப்தமி விழாவாக போற்றப்படுகிறது. சூரியன் தன் வடக்கு நோக்கிய பயணத்தில் சிறுக சிறுக வெப்பத்தை கூட்டுகிறார் என்பது சாஸ்திரம்.ஆயுள், ஆரோக்கியம் தரும் விரதங்கள் பல இருந்தாலும் அனைத்திலும் சிறந்ததாக கருதப்படுவது ரத சப்தமி விரதம். இதன்படி பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் புஷ்ப ரதத்தில் எழுந்தருளினார்.காலை 8:00 மணி முதல் மாலை வரை அனைத்து வீதிகளிலும் வலம் வந்தார். அப்போது பக்தர்கள் 'கோவிந்தா' கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்ததுடன் அனைத்து வீடுகளிலும் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். பல்வேறு இடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை, காந்திஜி விழாக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.*பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் நேற்று காலை கோயில் முன்பு உள்ள மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் எழுந்தருளினார். மாலை 5:00 மணி துவங்கி வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தார்.பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடினர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி