மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
ஆன்மிக புத்தகங்கள்கி.செந்தில்குமார், நகைக்கடை அதிபர், ராமநாதபுரம்: இங்கு ஆன்மிக புத்தகங்கள் அதிகளவில், குறைந்த விலையில் கிடைக்கின்றன. புத்தகங்களை தேடிப்போய் வாங்காமல் அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கிச்செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று ஆண்டாளும் அற்புதங்களும், மஹா அவதார் பாபாஜி, கம்பீரகாசி, ஷிர்டிபாபா, பிள்ளையார் சுழி, காஞ்சி பெரியவரின் கருணை, என புத்தகங்கள் வாங்கியுள்ளேன்.அறிவியல் சார்ந்த புத்தங்கள்க.வளர்மதி, ஆசிரியை, ரெகுநாதபுரம்: அறிவயில் சார்ந்த புத்தகங்கள் குழந்தை பருவத்தில் கண்டுபிடிப்பாளர்களின் வரலாறு ஆர்வத்தினை ஏற்படுத்தியது.ஆன்மிகம், இலக்கியம், கவிதை, கட்டுரை போன்ற போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு தேவையான புத்தகங்கள் அதிகளவில் உள்ளன. கோளரங்கம், டெலஸ் கோப், மூலிகை செடிகளும் அதன் நோய்களுக்கான தீர்வும் தரப்பட்டுள்ளன. அறிவியல் சார்ந்த புத்தகங்கள் வாங்கியுள்ளேன்.மனஅழுத்தம் போக்கும் புத்தகம்:சி.மீனாட்சி, ஓவிய ஆசிரியை, பெரியபட்டினம்: முன்பெல்லாம் மதுரைக்கு சென்று புத்தகங்கள் வாங்குவோம். தற்போது ராமநாதபுரத்தில் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புத்தகங்கள் வாசிப்பதால் மன அழுத்தங்கள் குறையும். நான் வேர்கள், முள்ளும் மலரும் போன்ற புத்தகங்கள் வாங்கினேன். எனது தாயின் நினைவாக இந்த புத்தகங்கள் வீட்டு நுாலகத்தில் இடம் பெறும்.-------
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago