உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா துவக்கம்

ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா துவக்கம்

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை 6:30 மணிக்கு மவுலீதுடன் துவங்கியது.851ம் ஆண்டின் சந்தனக்கூடு என்னும் மத நல்லிணக்க விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக ஏர்வாடி மீனவ கிராம மக்கள் ஒன்று கூடி அருகே உள்ள மன்னார் வளைகுடா கடலுக்குச் சென்று ஆண்களும், பெண்களும் ஏராளமான குடங்களில் கடல் நீரை சேகரித்து கொண்டு வந்து அவற்றில் மஞ்சள் பொடி துாவி தர்கா அலங்கார மண்டபத்தின் முன்புறம் வைத்தனர்.உலக நன்மைக்கான சிறப்பு துவா ஓதப்பட்டது.பின் கொண்டு வந்த கடல் நீரைக்கொண்டு தர்காவின் தரைப்பகுதிகள் முழுவதையும் கழுவி சுத்தம் செய்யும் பணி நடந்தது. நேற்று மாலை 6:30 மணிக்கு ஷெரீப் மண்டபத்தில் மவுலீது எனப்படும் புகழ் மாலை துவங்கி மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து 23 நாட்களுக்கு ஓதப்படுகிறது.மே 9ல் ஏர்வாடி பாதுஷா நாயகத்தின் பச்சை வண்ண பிறை கொடி யானையின் மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தர்கா முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்க உள்ளது. உரூஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா மே 21 மாலை துவங்கி மறுநாள் (மே22) அதிகாலை புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து மாலை முதல் இரவு வரை ஓதக்கூடிய மவுலீது நிகழ்ச்சியில் பங்கேற்க ஏராளமானோர் வருகின்றனர்.ஏற்பாடுகளை ஏற்பாடு தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

c.mohanraj raj
ஏப் 30, 2025 07:19

மதம் நல்லிணக்கம் என்பது ஏமாற்று வேலையை ஒரு வகையில் இவர்கள் சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள் மற்ற சமுதாயத்தையும் மதிக்க மாட்டார்கள் ஒரு சிலரைத் தவிர


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை