உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கால்நடைகளால் ஏற்படும் பாதிப்பால் கோடை விவசாயம் செய்ய தயக்கம்

கால்நடைகளால் ஏற்படும் பாதிப்பால் கோடை விவசாயம் செய்ய தயக்கம்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் கண்மாய்களில் நீர் நிரம்பியிருந்தும் கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுவதால் கோடை விவசாயம் செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர்.திருவாடானை தாலுகாவில் கடந்த ஆண்டு 26 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி துவங்கியது. போதிய மழை பெய்ததால் அனைத்து கண்மாய்களும் நிரம்பின. நெற்பயிர் அறுவடை வரை வயல்களில் தண்ணீர் தேங்கியதால் கண்மாய் நீரை பாய்ச்ச வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. இதனால் கண்மாய்களில் தேங்கிய நீர் வற்றாமல் நிரம்பியுள்ளது. இந்த நீரை பயன்படுத்தி கோடை விவசாயம் செய்யலாம். ஆனால் கோடை விவசாயம் செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.திருவாடானை விவசாயிகள் கூறியதாவது:பருவ காலத்தில் அனைத்து வயல்களில் விவசாயம் நடப்பதால் கால்நடைகள் தொல்லை இருக்காது. ஆடு, மாடு வளர்ப்பவர்கள் தங்களது பாதுகாப்பில் வளர்ப்பார்கள். ஆனால் அறுவடை முடிந்து விட்டதால் அவிழ்த்து விட்டு விடுகின்றனர். கோடை விவசாயம் செய்யும் பட்சத்தில் கால்நடைகளால் பெரும் பாதிப்பு ஏற்படும். மேலும் செலவும் அதிகமாகும். எனவே தான் கோடை விவசாயம் செய்ய இயலவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை