உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எஸ்.பி.பட்டினத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

எஸ்.பி.பட்டினத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் கடற்கரை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் கடற்கரை ஓரங்களில் அப்பகுதியை சேர்ந்த சிலர் இடங்களை முள் வேலி அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். இது குறித்து எஸ்.பி.பட்டினம் மக்கள் ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடந்த ஆண்டு டிச.4 ல் மனு அளித்தனர். அந்த மனுவை திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று கடற்கரை ஓரங்களில் ஆங்காங்கே சிலர் முள்வேலி அடைத்து ஆக்கிரமித்திருந்த இடங்கள் புல்லுார் ஆர்.ஐ., ஜெயலட்சுமி, மருங்கூர் குருப் வி.ஏ.ஒ., ராஜேஸ் முன்னிலையில் அகற்றபட்டது. எஸ்.பி.பட்டினம் மக்கள் கூறுகையில் எஸ்.பி.பட்டினம் கடற்கரை பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை