மேலும் செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
13-Jul-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை நகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். ராமநாதபுரம் திரவுபதி அம்மன் கோயில் அருகே உள்ள ஊருணியை சுற்றியுள்ள பகுதியை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் அப்பகுதியில் உள்ள 4 கடைகள், 3 வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. காலிசெய்யாத நிலையில் ராமநாதபுரம் தாசில்தார் ரவி தலைமையிலான அதிகாரிகள், போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் 4 கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர். வீடுகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் வழங்குமாறு குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதனால் வீடுகளை காலி செய்ய ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தாசில்தார் ரவி கூறியதாவது: திரவுபதி அம்மன் கோயில் அருகே உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் தற்போது அகற்றப்படுகிறது. ஆக்கிரமிப்பை காலி செய்யுமாறு பலமுறை நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காலி செய்ய மறுத்து வந்தனர். தற்போது 4 கடைகள் மட்டும் இடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் ஆக.,6ல் அப்புறப்படுத்தப்படும் என்றார்.
13-Jul-2025