உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதமடைந்த மின்கம்பம் மாற்றம்

சேதமடைந்த மின்கம்பம் மாற்றம்

முதுகுளத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார்--சாயல்குடி ரோடு கடலாடி அருகே சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரிய பணியாளர்கள் மாற்றினர்.முதுகுளத்துார் பேரூராட்சி கடலாடி ரோட்டில் உள்ள வீடுகளுக்கு முதுகுளத்துார் துணை மின் நிலையத்திலிருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. கடலாடி ரோடு அங்கன்வாடி மையம் அருகே உள்ள மின்கம்பத்தில் வாகனம் மோதியதில் மின்கம்பம் சேதமடைந்தது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை மின்வாரியத்தினர் அமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி