மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாவட்ட நிர்வாகம், அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் 76வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.*ராமநாதபுரம் தினமலர் நகரில் உள்ள தினமலர் நாளிதழ் கிளை அலுலகத்தில் குடியரசு தினவிழாவையொட்டி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. *ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் சிம்ரன்ஜீத் காலோன் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து, போலீசார் மரியாதையை ஏற்றுக்கொண்டார். மூவர்ண பலுான், சமாதான புறாவை பறக்கவிட்டார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 92 போலீசார், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 210 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மாற்றுத்தினாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, சமூகநலத்துறை, ஆகிய துறை சார்பில், 96 நபர்களுக்கு ரூ.55 லட்சத்து 70 ஆயிரத்து 995 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பாண்டியராஜன் மனைவி காளியம்மாள் உள்ளிட்ட வாரிசுதாரர்களுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.இவ்விழாவில் டி.ஐ.ஜி., அபிநவ்குமார், எஸ்.பி., சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப் சிங், வன உயிரின காப்பாளர் முருகன்,, மாவட்ட வன அலுவலர் ேஹமலதா, சப்கலெக்டர் அபிலாஷா கவுர் , உதவி கலெக்டர் (பயிற்சி) முகமதுஇர்பன், அரசுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் பங்கற்றனர். அலுவலகங்கள்
* ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., சந்தீஷ் கொடியேற்றினார். இந் நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.* ராமநாதபுரம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.எஸ்.பி., சிவராமன் கொடியேற்றினார். * ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் கொடியேற்றினார். ராமநாதபுரம் பி.1 போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கொடியேற்றினார்.* ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் பிரகாஷ் ஐ.ஆர்.எஸ்., தலைமை வகித்து கொடியேற்றினார். இந் நிகழ்ச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர். * ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோட்டப்பொறியாளர் முருகன் கொடியேற்றினார். பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். * ராமநாதபுரம் மாவட்ட வனஉயிரின கோட்டம் அலுவலகத்தில் தேசியகொடியேற்றப்பட்டது. வனக்காப்பாளர் முருகன், வனச்சரகர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். பள்ளி, கல்லுாரிகள்
* ராமநாதபுரம் செய்யது அம்மாள் செவிலியர் பள்ளியில் செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ராசிகா கொடியேற்றினார். கல்லுாரி முதல்வர் ஆர்த்தி, துணை முதல்வர் ஜூலி நேசமணி, பணியாளர்கள் பங்கேற்றனர்.* செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ராசிகா கொடியேற்றினார். முதல்வர் பெரியசாமி, பேராசியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன் செய்திருந்தார்.* செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செய்யது அம்மாள் டிரஸ்டின் உறுப்பினர் டாக்டர் சானஸ் பரூக் அப்துல்லா கொடியேற்றினார். கல்லுாரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா, ராஜாத்தி அப்துல்லா வாழ்த்துக்களை தெரிவித்தனர். பேராசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, சபியுல்லா ஆகியோர் செய்தனர்.* ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை அறிவியல் கல்லுாரியில் தாளாளர் வேலுமனோகரன் கொடியேற்றினார். செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் ரஜினி செய்திருந்தார். மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.* சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை தலைவர் முகமது தவுபீக் கரீம் தலைமை வகித்தார். பள்ளியின் ஆயுள் காலத்தலைவர் முகமது யூசுப் ஆகியோர் கொடியினை ஏற்றினர். பள்ளிகளின் தாளாளர் சாகுல் ஹமீது கனி முன்னிலை வகித்தார். விழா ஏற்பாடுகளை பள்ளிகளின் செயலாளர் சாகுல் ஹமீது, பள்ளி தலைமையாசிரியர் ஜவஹர் அலி, ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியை சாஜிதாபானு செய்தனர்.* போகலுாரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளியின் நிர்வாகி மாடசாமி கொடியேற்றினார்.* அழகன்குளத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் ஏ.கே.அகமது கொடியேற்றினார். இதில் அப்பகுதியினர் பங்கேற்றனர்.* மண்டபம் ஒன்றியம் சின்னப்பாலம் நடுநிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் மிக்கேல் ராணி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர் பாண்டியம்மாள், பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர் வனிதா முன்னிலை வகித்தனர். ஆசிரியை சந்திரமி வரவேற்றார். ஆசிரியர் லியோன் கொடியேற்றினார். ஆசிரியை லாரன்ஸ் எமல்டா நன்றி கூறினார்.* கடலாடி ஊராட்சி ஒன்றியம் முத்தரையர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் புல்டன் கொடியேற்றினார். ஆசிரியர்கள் சந்தாகனி, வீரலட்சுமி, பிரிஜிதா, சோலைராஜா பங்கேற்றனர். கணித ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.---------முதுகுளத்துார் பள்ளி, கல்லுாரிகள்
*முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோசப் விக்டோரியா ராணி தேசியக்கொடி ஏற்றினார். மாறுவேடம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தாமரை தொண்டு நிறுவனம் சார்பில் பொறுப்பாளர் சகுந்தலா. உறுப்பினர்கள் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. * முதுகுளத்துார் இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றினார்.* முதுகுளத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமைஆசிரியர் சந்தனவேல் தேசிய கொடி ஏற்றினார். மாணவர்களுக்கு சேது சீமை பட்டாளம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமர் உட்பட பலர் பங்கேற்றனர்.* முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி தலைமையில் தாளாளர் சாகுல்ஹமீது கொடி ஏற்றினார். * முதுகுளத்துார் அருகே துாரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காளிமுத்து கொடியேற்றினார்.* முதுகுளத்துார் கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சேர்மன் காந்திராசு கொடி ஏற்றினார்.* முதுகுளத்துார் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ரவீந்திரன் கொடி ஏற்றினார்.* சாம்பக்குளம் அருகே கவினா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் ஹேமலதா கொடி ஏற்றினார்.* முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல்வர் பாண்டிமாதேவி கொடி ஏற்றினார். அலுவலகங்கள்
* முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சடையாண்டி கொடி ஏற்றினார். * முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., ஜானகி கொடி ஏற்றினார். பி.டி.ஓ.,லட்சுமி, மேலாளர் கார்த்தி உட்பட அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். * முதுகுளத்துார் டி.எஸ்.பி.,முகாம் அலுவலகத்தில் டி.எஸ்.பி., சின்னக்கண்ணு கொடி ஏற்றினார். * முதுகுளத்துார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் கொடி ஏற்றினார். * முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் நாகரஞ்சித் கொடி ஏற்றினார். செவிலியர்கள் சுகாதாரத் துறையினர் பலரும் இருந்தனர். * முதுகுளத்துார் துணைமின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் மாலதி கொடி ஏற்றினார்.* முதுகுளத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் ஊராட்சி செயலர்கள் முன்னிலையில் கொடி ஏற்றினர்.* முதுகுளத்துார் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அலுவலகத்தில் தர்மர் எம்.பி., கொடி ஏற்றினார். * முதுகுளத்துார்அருகே விளங்குளத்துார் பசும்குடில் ஆதாரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் காப்பகத்தில் அவார்டு டிரஸ்ட் செயலாளர் சின்னமருது கொடி ஏற்றினார். * முதுகுளத்துார் த.மு.மு.க., சார்பில் மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமையில் நகர் தலைவர் முகைதீன் அப்துல் காதர் கொடி ஏற்றினார். * முதுகுளத்துார் காந்திசிலை அருகே காங்., கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட துணை தலைவர் வேலுச்சாமி கொடி ஏற்றினார். வட்டார தலைவர்கள் ராமர், புவனேஸ்வரன்,சுரேஷ்காந்தி பங்கேற்றனர்.திருவாடானை அலுவலகங்கள்
* திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அமர்நாத் கொடியேற்றினார். * நீதிமன்றத்தில் நீதிபதி மனிஷ்குமார் கொடியேற்றினார். * டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. சீனிவாசன் கொடியேற்றினார். * ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் கொடியேற்றினார். தனி அலுவலர் ஆரோக்கியமேரிசாராள், மேலாளர் ஜெயமுருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். * சின்னக்கீரமங்கலம் தீயணைப்புநிலையத்தில் நிலைய அலுவலர் உத்தண்டசாமி, தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு கொடியேற்றினர். பள்ளி, கல்லுாரிகள்
* திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் முதல்வர் பழனியப்பன், அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கதிரவன், தொண்டி அரசு தொடக்கபள்ளி (கிழக்கு) தலைமைஆசிரியர் லியோஜெரால்டுஎமர்சன், தொண்டி அரசு தொடக்கபள்ளி (மேற்கு) தலைமைஆசிரியர் சாந்தி, நம்புதாளை அரசு தொடக்கபள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான்தாமஸ் ஆகியோர் கொடியேற்றினர்.கீழக்கரை அலுவலகங்கள்
* கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முகமது ஜமாலுதீன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். வருவாய் துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.* கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் செஹானாஸ் ஆபிதா தேசிய கொடி ஏற்றி வைத்தார். கமிஷனர் ரெங்கநாயகி உட்பட நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.* திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் பி.டி.ஒ., கோட்டை இளங்கோவன் முன்னிலையில், யூனியன் கமிஷனர் ராஜேஸ்வரி தேசியக்கொடிஏற்றினார். துணை பி.டி.ஓ., விஜயகுமார், அலுவலகப் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.* கடலாடி யூனியன் அலுவலகத்தில் ஆணையாளர் சங்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பி.டி.ஓ., ஜெய ஆனந்த் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.* சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் திருப்பதி, தேசிய கொடி ஏற்றினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பள்ளி, கல்லுாரிகள்
* கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் சேக் தாவூது தேசிய கொடி ஏற்றி வைத்தார். என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் கொடி அணிவிப்பு மரியாதை நடந்தது. * கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ராஜசேகர் தேசிய கொடி ஏற்றி வைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை இயக்குநர் தவசலிங்கம், பேராசிரியர்கள் முனிய சத்யா, சதாம் உசேன் பங்கேற்றனர். * கீழக்கரை முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் குடியரசு தின விழா நடந்தது. முதல்வர் நிர்மல் கண்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜேஸ்வரன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார், பி.ஆர்.ஓ., நஜ்முதீன் செய்தனர்.* கீழக்கரை மத்திய மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் நாதியா ஹனிபா தலைமை வகித்தார். தேசிய கொடியினை பழைய குத்ப்பா பள்ளி ஜமாத் துணைத் தலைவர் இஸ்ஸதீன் ஏற்றி வைத்தார்.திருப்புல்லாணி* ஆர்.எஸ். மடை அமிர்த வித்யாலயாவில் குடியரசு தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி அம்மா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் கோகிலா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் பல் டாக்டர் ஷாஜகான் தேசிய கொடி ஏற்றி வைத்தார். கலைநிகழ்ச்சிகள் நடந்தது.* பெருநாழி அருகே உச்சிநத்தம் ஆறுமுக விலாஸ் ஹிந்து ஆரம்பப் பள்ளியில் பள்ளிச் செயலர் காசிமுத்து வீரபாண்டியன் தேசிய கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். உதவி ஆசிரியர் செல்வி நன்றி கூறினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.பரமக்குடி அலுவலகங்கள்
* பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில், சப் கலெக்டர் அபிலாஷா கவுர் தேசிய கொடி ஏற்றி வைத்து, சிறந்த பணியாற்றிய அலுவலகங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.* பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை வகித்து கொடியேற்றினார். சார்பு நீதிபதி சதீஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்ரமணியன், குற்றவியல் நீதிபதி பாண்டி மகாராஜா முன்னிலை வகித்தனர். வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன், செயலாளர் யுவராஜ் பங்கேற்றனர்.* பரமக்குடி நகராட்சி அலுவலக்தில் தலைவர் சேது கருணாநிதி தேசிய கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் குணா முன்னிலை வகித்தார். ஆணையர் முத்துச்சாமி வாழ்த்தினார். அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.* பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., சந்திரசேகரன் கொடியேற்றினார். நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., தேவபிரிய தர்ஷினி கொடியேற்றினார். * போகலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., திருநாவுக்கரசு கொடி ஏற்றினார். பள்ளி, கல்லுாரிகள்
* பரமக்குடி அருகே போகலூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவஷ்ய வித்யாலயா உண்டு, உறைவிட பள்ளியில் நிர்வாகி மாடசாமி தேசியக்கொடி ஏற்றினார். * பரமக்குடி புதுநகர் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் தாளாளர் முகைதீன் முசாபர் அலி கொடி ஏற்றினார். * பரமக்குடி பாரதியார் நடுநிலைப் பள்ளியில் தாளாளர் குணா கொடியேற்றினார். தலைமை யாசிரியர் ஜெயசங்கர் வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.* பரமக்குடி ஆயிர வைசிய பி.எட்., கல்லுாரியில் செயலாளர் டாக்டர் வரதராஜன் தலைமை வகித்தார். கல்வி குழு தலைவர் போஸ், இணைத்தலைவர் பாலுசாமி முன்னிலை வகித்தனர். அலங்காநல்லுார் அரசு பள்ளி ஆசிரியர் செந்தில்குமார் கொடியேற்றினார். * பரமக்குடி காளிதாஸ் நடுநிலைப் பள்ளியில் தலைமை யாசிரியர் முரளிதரன் கொடி ஏற்றினார். நகராட்சி கவுன்சிலர்கள் முத்துக்குமார், துரை சரவணன் முன்னிலை வகித்தனர். * பரமக்குடி அருகே சோமநாத நகர் சவுராஷ்டிர தேசிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி தலைவர் ராமையன் தலைமை வகித்தார். தாளாளர் குப்புசாமி வரவேற்றார். மதுரை இன்ஜினியர் ருக்மாங்கதன் தேசிய கொடி ஏற்றினார்.ஆர்.எஸ்.மங்கலம் அலுவலகங்கள்
* ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில், நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஆணையாளர் மலைராஜ் தேசியக்கொடி ஏற்றினார். பி.டி.ஓ., லிங்கம், மேலாளர்கள் நாகராஜ், ஆரோக்கியதாஸ் பங்கேற்றனர். * ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் மாலதி முன்னிலையில், பேரூராட்சி தலைவர் மௌசூரியா கொடியேற்றினார். பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.* ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், போலீசார்கள் முன்னிலையில், போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல் ஹிசாம் தேசிய கொடி ஏற்றினார். * ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வரதராஜன் தேசிய கொடி ஏற்றினார். மண்டல துணை வட்டாட்சியர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளிகள்
* ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை யாசிரியர் சுயம்புலிங்கம் தலைமையில், கவுன்சிலர் வைரவன் கொடியேற்றினார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார், ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.* ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் பகவதிக்குமார் கொடியேற்றினார். ஆசிரியர்கள் மெசியானந்தி, தங்கபாண்டியன், ராஜசேகரன் பங்கேற்றனர்.* ஆர்.எஸ்.மங்கலம் அருகே அளிந்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமை யாசிரியை ஜோதி தேசிய கொடி ஏற்றினார். உதவி ஆசிரியர் சாந்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். * ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய கிழக்கு பள்ளியில், தலைமை ஆசிரியர் (பொ) பூவலிங்கம் தலைமையில், கவுன்சிலர் சரண்யா தேசிய கொடியேற்றினார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. * ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜு கொடியேற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராணி, பி.டி.ஐ., தலைவர் பாத்திமா கனி பங்கேற்றனர்.ராமேஸ்வரம்* ராமேஸ்வரத்தில் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் அப்துல்ஜபார், ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் நாசர்கான்,ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அலுவலகத்தில் இணை ஆணையர் சிவராம்குமார், ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் ராஜேஸ், திருக்கோயிலின் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தங்கம்மாள், மண்டபம் பேரூராட்சியில் தலைவர் ராஜா, பாம்பன், தங்கச்சிமடம் ஊராட்சியில் செயலாளர்கள் கதிரவன், பன்னீர்செல்வம் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.கமுதி* கமுதி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,சந்திரமோகன் கொடி ஏற்றினார். மேலாளர்கள்,அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.* கமுதி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் காதர்முகைதீன் கொடி ஏற்றினார். அலுவலர்கள், மக்கள் பங்கேற்றனர்.* கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் அப்துல் வஹாப் சகாராணி கொடி ஏற்றினார்.துணைத் தலைவர் அந்தோணி சவேரியார் அடிமை, செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள்,பணியாளர்கள் பங்கேற்றனர்.* அபிராமம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பாத்திமா கனி கொடி ஏற்றினார் . துணைத்தலைவர் மாரி முன்னிலை வகித்தார்.* கமுதி பசும்பொன் திரு முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லுாரியில் முதல்வர் தர்மர் கொடி ஏற்றினார்.* முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் ஷாஜகான் கொடி ஏற்றினார். செயல் அலுவலர் செல்வராஜ், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
27-Jan-2025