உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து அரசு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து அரசு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை

திருவாடானை : இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, சம்பா அரிசி, கருங்குருவை அரிசி, கறுப்புகவுனி அரிசி சாகுபடியில் இழப்பை தவிர்க்க கொள்முதல் விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.திருவாடானை தாலுகாவில் விவசாய பணிகள் முதலிடத்தில் உள்ளது. விளைச்சலை அதிகரிக்க விவசாயிகள் அதிக அளவில் ரசயாண உரங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் எங்கும் எதிலும் ரசாயணம் என்ற நிலை உருவாகி நாம் உண்ணும் உணவுகளில் சத்துகள் குறைவாக உள்ளது. இத் தாலுகாவில் இயற்கை விவசாயம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆங்காங்கே ஒரு சில கிராமங்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சில விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஓரியூர் விவசாயி பழனி கூறியதாவது: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. நான் மாப்பிள்ளை சம்பா அரிசி, கருங்குருவை அரிசி, கறுப்புகவுனி அரிசி போன்ற பல்வேறு தானியங்களை விவசாயம் செய்தேன். அறுவடைக்கு பின் வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தார்கள். இதனால் நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்து அரசே கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யவேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தேன். ஆகவே இயற்கை விவசாயம் செய்யும் ஆர்வத்தை விவசாயிகளிடம் ஏற்படுத்தி, கொள்முதல் விலையையும் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை