மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு வரவேற்பு
04-Jun-2025
சாயல்குடி, : சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டடம் 8 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது.பொன்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்பறைகள் உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிமென்ட் சீட்டு கூரையிலான கட்டடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் போதிய காற்றோட்டம் இன்றி மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. கடலாடி யூனியன் முன்னாள் துணைத் தலைவர் ஆத்தி கூறியதாவது:பொன்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 வகுப்புகள் உள்ளன. சிமென்ட் சீட்டு கூரை கட்டடத்தில் இயங்கி வருவதால் போதிய காற்றோட்டம் இன்றி வெயில் காலத்தில் பெரும் சிரமத்தை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் 6 முதல் 8 வகுப்பறை மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் அவசியத் தேவையாக உள்ளது.முதுகுளத்துார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி புதிய கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி தரமான முறையில் கூடுதல் வகுப்பறை கட்டடங்களை எழுப்புவதற்கும் அவசிய தேவையாக உள்ளது என்றார்.
04-Jun-2025