உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பால வேலையை முடிக்க கோரிக்கை 

 பால வேலையை முடிக்க கோரிக்கை 

திருவாடானை: நகரிகாத்தான் பால வேலையை விரைவாக முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். திருவாடானை-ஓரியூர் சாலையில் நகரிகாத்தான் அருகே தரைபாலத்தை உயர்த்தி பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற வாகனங்கள் சிறுநல்லுார் வழியாக செல்கின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பாலத்தின் அருகே மாற்றுப் பாதை இல்லாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவாடானை-ஓரியூர் முக்கிய சாலையாக திகழ்வதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. பஸ்கள் நிறுத்தப்பட்டதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் அடைந்துள்ளனர். பாலம் அத்தியாவசிய தேவையாக இருந்த போதும், போக்குவரத்து பாதிப்பதால் பெரும் சிரமமாக உள்ளது. எனவே பால வேலையை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை