உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை

பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடத்தை நிரப்ப கோரிக்கை

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சோழந்துாரை சேர்ந்த மணி பேனர் ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டார்.அவரை போலீசார் கண்டித்து கலெக்டரிடம் மனு அளிக்க கூறினர். அப்போது வேறு வேலையாக மனு அளிக்க வந்த சோழந்துார் மக்களும் மணியுடன் சேர்ந்து அரசுப் பள்ளிகளில் தலைமை யாசிரியர் இல்லாதாதல் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது.காலியாக உள்ள தலைமை யாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பிறகு கலெக்டரிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை