உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாய நிலத்தில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

விவசாய நிலத்தில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி செல்லும் ரோட்டில் விவசாய நிலத்தில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.வெண்ணீர்வாய்க்காலில் இருந்து வெங்கலக்குறிச்சி செல்லும் ரோட்டில் கரிமூடை ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசி சென்ற போது மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் விவசாய நிலத்தில் இருந்த 8 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்தது.இப்பகுதியில் உழவுப் பணியில் ஈடுபட்டு வருவதால் விவசாய நிலத்தில் மின்கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால் பணிகளை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். கிருஷ்ணாபுரம், கீழப்பனையேந்தல், கண்ணாபுரம், வெங்கலக்குறிச்சி, திருவாச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்காததால் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டார்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.மின்வாரிய அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிராம மக்கள் நலன்கருதி சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் மாற்றி தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை