பூஜாரிகளுக்கு நிபந்தனைகளின்றிசம்பளம் வலியுறுத்தி தீர்மானம்
ராமநாதபுரம்,: கிராமக்கோயில் பூஜாரிகள் அனைவருக்கும் நிபந்தனைகள் ஏதுமின்றி மாத சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.ராமநாதத்தில் கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொதுக்குழுகூட்டம் நடந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டல அமைப்பாளர்சரவணன் தலைமை வகித்தார். கிராம கோயில் பூஜாரிகள்பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், மாவட்டஅமைப்பாளர் அன்புமாறன், அருள்வாக்கு அருள்வோர் பேரவைநிர்வாகி கோட்டையம்மாள் முன்னிலை வகித்தனர். தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியில் கிராம கோயில் பூஜாரிகளுக்கு மாத சம்பளமாக ரூ.2000 வழங்கப்படும் எனஅறிவித்தது. அதை இன்று வரை நிறைவேற்றவில்லை. எனவே எந்த நிபந்தனையும் இன்றி ரூ.10ஆயிரம் மாதச்சம்பளம்வழங்க வேண்டும்.60வயதான பூஜாரிகளுக்கு மாத ஒய்வூதியம்ரூ.5000 தர வேண்டும். கிராம கோயில்களுக்கு கட்டணமில்லாமல்மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மதுரை ஆன்மிக பேச்சாளர் ஆசிரியர்கலைச்செல்வி, ராமேஸ்வரம் வில்லுண்டி தீர்த்தம் ஆத்ம சித்தர்மடம் லட்சுமி அம்மாள், சிவமடம் கணேசபண்டார சன்னிதானம் உட்பட பலர் பங்கேற்றனர்.