வருவாய்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்: 2ம் நாளாக பணிகள் பாதிப்பு
ராமநாதபுரம்: தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இரண்டாம் நாளாக நேற்றும் ராமநாதபுரத்தில் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அலுவலர்கள் வருகையின்றி வெறிச்சோடியது. ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் நடத்த வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி 48 மணி நேரம் (செப்.,3, 4) வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதன் காரணமாக அலுவலர்கள் வருகையின்றி தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடியது. 2ம் நாளாக வழக்கமான அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது.