உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குளம்போல் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

குளம்போல் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

கமுதி: கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் குளம்போல் தேங்கி இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வேறு வழியின்றி ரோட்டில் குளம்போல் தேங்குகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இப்பகுதிகளில் பள்ளி, கோயில் வளாகம் இருப்பதால் இவ்வழியே செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் துர்நாற்றத்துடன் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை