உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாத்தங்குடி வெள்ளாங்குளத்தில் 15 ஆண்டுகளாக ரோடு சேதம்

சாத்தங்குடி வெள்ளாங்குளத்தில் 15 ஆண்டுகளாக ரோடு சேதம்

கடலாடி:கடலாடி அருகே மீனங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தங்குடி வெள்ளாங்குளம் ரோடு 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்துள்ளது. மீனங்குடி ஊராட்சி சாத்தங்குடி வெள்ளாங்குளத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் சாலையில் ஒரு கி.மீ., ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.கிராம மக்கள் கூறியதாவது: ரோட்டை 15 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்காமல் உள்ளனர். இதுகுறித்து பலமுறை யூனியன் நிர்வாகத்தில் புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே கடலாடி யூனியன் அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து புதிய சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளும் அதிகளவு உள்ளது. இது குறித்து கலெக்டருக்கு மனு அளித்துள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை