ராமேஸ்வரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் போக்குவரத்து காவல் துறை மற்றும் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலத்தை ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி., மீரா துவக்கி வைத்தார். ராமேஸ்வரம் அரசு பள்ளியில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் கோயில் மேலவாசல், திட்டக்குடி வழியாக ராமேஸ்வரம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. மாணவர்கள் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கோஷமிட்டனர். ஊர்வலத்தில் ராமேஸ்வரம் போக்குவரத்து ஆய்வாளர் பிரதாப் சிங், எஸ்.ஐ., சதீஷ், ராமேஸ்வரம் அரசுப் பள்ளி என்.சி.சி., அலுவலர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.