உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு ரோலர்  ஸ்கேட்டிங் போட்டிகள்  

மாணவர்களுக்கு ரோலர்  ஸ்கேட்டிங் போட்டிகள்  

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் 20 பள்ளிகளில் இருந்து 200 மாணவர்கள் பங்கேற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தது.ராமநாதபுரம் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன், மெனு ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளை ராமநாதபுரம் ராஜா நாகேந்திரசேதுபதி துவக்கி வைத்தார்.மாணவர்களுக்கு பேசிக், குவாட், இன்லைன் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சக்கரக்கோட்டை ஊராட்சிதலைவி யாழினி புஷ்பவள்ளி சான்றிதழ்களையும், பரிசுகளையும், பதக்கங்களையும் வழங்கினார்.ஏற்பாடுகளை ரோலர் ஸ்கேட்டிங் மாவட்ட பயிற்சியாளர் செந்தில்குமார் செய்திருந்தார். ரோலர் ஸ்கேட்டிங் மாணவர்கள் காச நோய் தடுப்பு விழிப்புணர்வு பயணமாக ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ