மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
1 minutes ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
1 minutes ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ. 2 கோடியே 9 லட்சம் தமிழக அரசுக்கு வருவாயாக கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்கு பின்பு நேற்று சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் இணை ஆணையர் செல்லத்துரை முன்னிலையில் காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர். பின் காணிக்கைகளை கோயில் கல்யாண மண்டபத்தில் உதவி ஆணையர் ரவீந்திரன், கோயில் ஆய்வாளர் சிவகுமார், பேஸ்கார் கமலநாதன், பஞ்சமூர்த்தி, முனியசாமி, ராமநாதன் மற்றும் சிவனடியார் குழுவினர் பலர் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ. 2 கோடியே 09 லட்சத்து 80 ஆயிரத்து 165 ரூபாயும், தங்கம் 85 கிராம், வெள்ளி 5 கிலோ காணிக்கையாக கிடைத்தது.
1 minutes ago
1 minutes ago