மேலும் செய்திகள்
காத்திருப்பு போராட்டம்
23-Jul-2025
ராமநாதபுரம்,:-தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறைதொழிலாளர்கள் சங்கத்தினர் ஊராட்சிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக., 5 ல் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஊராட்சிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கொரோனா கால தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பணிக்கொடை பட்டுவாடா சட்டப்படி தற்காலிகமாக பணிபுரியும் அனைவருக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும். துறையில் பணிபுரியும் அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் இ.எஸ்.ஐ., பி.எப்., குடும்ப நல நிதி வழங்க வேண்டும். மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்களுக்கு சத்துணவு ஊழியர்களுக்கு இணையான சலுகைகளை வழங்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் காலிபணியிடங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறைதொழிலாளர்கள் சங்கத்தினர் ஆக.,5 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். நேற்று(ஜூலை 22) அனைத்து மாவட்டங்களிலும் சோற்று சட்டியுடன் காத்திருப்பு போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.
23-Jul-2025