உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அறுவடை செய்த வயலில் வைக்கோல் விற்பனை

அறுவடை செய்த வயலில் வைக்கோல் விற்பனை

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் துவங்கிய நிலையில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் தேங்கும் வைக்கோலை விவசாயிகள் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் தாலுகாக்களில் கடந்த இரண்டு வாரங்களாக நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயந்திரங்களில் அறுவடை பணியின் போது வைக்கோல்கள் தேங்கி உள்ளன. இவற்றை விவசாயிகள் கால்நடை தீவனத்திற்காக வியாபாரிகளிடம் கட்டுக் கட்டாக கட்டி விற்பனை செய்கின்றனர். ஆனந்தூர், திருத்தேர்வளை, சனவேலி, மேல்பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கேரள வைக்கோல் வியாபாரிகள் முகாமிட்டு கொள்முதல் செய்கின்றனர்.நெல் அறுவடை துவங்கிய 10 நாட்களுக்கு முன்பு 25 கிலோ வைக்கோல் கட்டு ரூ.90 க்கு வாங்கப்பட்ட நிலையில் பல பகுதிகளில் அறுவடை தீவிரமடைந்ததால் வியாபாரிகள் தற்போது 25 கிலோ கட்டு ரூ.40க்கு மட்டுமே கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். வெளி மாநிலங்களில் கூடுதல் விலைக்கு வைகோல் விற்கப்படும் நிலையில் இடைத்தரகர்களால் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ