உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் கொலு பொம்மைகள் விற்பனை; செப்.22 நவராத்திரி பூஜை துவக்கம்

பரமக்குடியில் கொலு பொம்மைகள் விற்பனை; செப்.22 நவராத்திரி பூஜை துவக்கம்

பரமக்குடி : பரமக்குடியில் கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படும் நிலையில், செப் 22 அன்று நவராத்திரி விழா துவங்க உள்ளது. நவராத்திரி விழா செப். 22 ல் தொடங்கி செப். 30 நிறைவடையும். 10வது நாளான அக். 2ல் விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் துர்கா தேவியின் வெவ்வேறு அவதாரங்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்படும். அப்போது 3, 5, 7, 9 அல்லது 11 படிகள் என்ற அடிப்படையில் வீடு மற்றும் கோயில்களில் அமைப்பர். இப்படிகளில் மனித வாழ்வின் படிப்படியான உயர்வுகள், உலக உயிரினங்கள் மற்றும் பரம்பொருளாகிய கடவுள்களின் சிலைகள் வைக்கப்படும். அதற்காக பரமக்குடியில் விலங்குகள், மனிதர்கள், முனிவர்கள், மகான்கள் மற்றும் தெய்வ அவதாரங்கள் சிலைகள் விற்கப்படுகிறது. இவை ரூ.10 முதல் ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி அவரவர்களுக்கு விருப்பமான பொம்மைகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை