மானிய விலையில் நெல் விதை விற்பனை
திருவாடானை: திருவாடானை வேளாண்மை அலுவலகத் தில் மானிய விலையில் விதை நெல் விற்பனை செய்யப்படுகிறது. திருவாடானை வேளாண்மை அலு வலர்கள் கூறியதாவது: திருவாடானை தாலுகாவில் ஆண்டுதோறும் 26 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு உழவுப் பணிகள் முடிந்து விதைப்பு பணிகள் துவங்கியுள்ளது. வேளாண்மை அலு வலகத்தில் அதிக மகசூலை ஈட்டி தரும் பி.பி.டி., ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., விதை நெல் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும். இது தவிர பாரம்பரிய விதைகளான துாயமல்லி, சீரகசம்பா விதைகளும் கையிருப்பில் உள்ளது. இவைகளும் 50 சத வீதம் மானியத்தில் வழங்கப்படும். தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு மானிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து விதை மற்றும் இடுபொருட்களை வாங்கி பயனடையலாம் என்றனர்.