உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழராமநதியில் சந்தனக்கூடு விழா

கீழராமநதியில் சந்தனக்கூடு விழா

கமுதி: -கமுதி கீழராமநதியில் மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவின் வருடாந்திர சந்தனக்கூடு விழா நடந்தது. பள்ளிவாசலில் சந்தனக்கூடு துவா செய்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஏராளமானோர் தமிழர்களின் பாரம்பரியமான களிகம்பு நடனமாடி ஊர்வலமாக சென்றனர். தர்ஹா வந்தடைந்த பின்பு அனைத்து மதத்தினரும் மலர்கள் வைத்து வழிபட்டனர். விழா ஏற்பாட்டினை விழா கமிட்டியாளர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ