உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  துாய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

 துாய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கமுதி: கமுதி பேரூராட்சியில் 18 நிரந்தர துாய்மைப் பணியாளர்களும், 17 தற்காலிக துாய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் துாய்மைப் பணிக்கு வருவதில்லை. மாற்று பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் தங்களுடன் துாய்மைப் பணிக்கு வர வேண்டும் என பல ஆண்டுகளாகவே நிரந்தர துாய்மைப் பணியாளர்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் துாய்மைப் பணிக்கு வந்து மாற்று வேலை செய்வதால் தங்களுக்கு பணிச் சுமை அதிகமாக உள்ளது எனக் கூறி நேற்று கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் தற்காலிக பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் கமுதி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசும் அவலநிலை உருவாகியுள்ளது. அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் துாய்மை பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் கூறியதையடுத்து பணியாளர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை