/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சாயல்குடி பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சாயல்குடி : சாயல்குடி சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா நேற்று காலை 10:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.மூலவர் பத்ரகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏப்.,11 மாலை 608 விளக்கு பூஜையும், ஏப்., 13ல் பக்தி பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,15ல் பால்குடம், பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்டவைகளும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை சாயல்குடி சத்திரிய ஹிந்து நாடார் உறவின் முறையினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.