மேலும் செய்திகள்
பராமரிப்பற்ற பள்ளி கட்டடம்
17-Oct-2024
ராமநாதபுரம்: தொண்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டடம் சேதம் மற்றும் போதிய கழிப்பறை வசதியின்றி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொண்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேலாண்மை குழு தலைவி காளீஸ்வரி தலைமையில் பெற்றோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர். இதில், பள்ளியில் 200க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. பள்ளி வகுப்பறை கிழக்கு பக்கம் கட்டடம் சேதமடைந்துள்ளது. மைதானம் வசதியின்றி மாணவர்கள் விளையாடமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி அருகே அரசு இடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
17-Oct-2024